how to speak english fluently in tamil | 4 Best English Speaking Learning Apps | ஆங்கிலம் வீட்டிலிருந்து படிப்பது எப்படி

 4 Best English Speaking Learning Apps

ஆங்கிலம் பேசுவதற்கு யாருக்கு தான் பிடிக்காது அனைவருக்கும் பிடிக்கும் அந்த ஆங்கிலத்தை மிகவும் சுலபமாக நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் எந்த  பயிற்சி மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுடைய பணத்தை வீணாக செலவு செய்ய வேண்டியதும் இல்லை மிகவும் சுலபமாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே  கற்றுக்கொள்ள முடியும்.

App 1  ( Bit English Tamil )

இந்தப் பயன்பாட்டின் பெயர் Bit English Tamil இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் சரளமாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள முடியும் மேலும் நீங்கள் எந்தெந்த இடத்திற்கு செல்கிறீர்களோ அந்த இடத்தில் என்னென்ன பேசவேண்டும் என்று தெளிவாக கொடுத்திருப்பார்கள்.

அதை நீங்கள் படிப்பதன் மூலமாக ஈஸியாக நீங்கள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முடியும் அது மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தின் பிளையை நீங்கள் திருத்திக் கொள்வதற்கு அதில் உங்களுக்கு Exam  வைப்பார்கள் அதை நீங்கள்  எழுதுவதன் மூலமாக உங்களுடைய ஆங்கில திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
கண்டிப்பாக இந்த  App  உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

App 2 ( English Conversations through Tamil )

இந்தப் பயன்பாட்டின் பெயர் English Conversation Through Tamil இதை நீங்கள் பயன்படுத்தி  நீங்கள் வெளியில் எங்காவது செல்கீறீர்கள் என்றால் அங்கு ஒருவரிடம் எப்படி பேசுவது  அதை மொத்தமாக வரிசையாக கொடுத்து இருப்பார்கள்.
அதை நீங்கள் படிப்பதன் மூலமாக மிகவும் சுலபமாக நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்  எடுத்துக்காட்டாக நீங்கள் Bank க்கு செல்கிறீர்கள் என்றால் அங்கு சென்று என்னென்ன சொல்வீர்கள் அவர்கள் உங்களிடம் என்ன கேட்பார்கள் என்பதை ஒரு  கதை போல் கொடுத்து இருப்பார்கள் அதனால் உங்களுக்கு கண்டிப்பாக அது  மறக்காது உங்கள் நினைவில் இருக்கும்.
பின்னர் நீங்கள் Bank ற்கு செல்லும்போது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ஒரு பெண் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள் எப்படி அதை படிக்க வேண்டுமென்று இதுவும் ஒரு சிறப்பான App பயன்படுத்திப்பாருங்கள்.

App 3  ( Learn English in Tamil )

இந்தப் பயன்பாட்டின் பெயர் Learn English in Tamil இதை நீங்கள் பயன்படுத்தினால் 30 நாட்களில் ஆங்கிலத்தை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் ஆங்கிலம் எதிலிருந்து உருவாகிறது அதனுடைய எழுத்து என்ன அதை எப்படி பேசவேண்டும் அதனுடைய வார்த்தையின் பெயர் என அனைத்தையும் இலக்கணமாக கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் படிப்பதன் மூலமாக ஈஸியாக நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

தினமும் நீங்கள் கற்க வேண்டிய பாடத்தை ஒன்றில் கொடுத்திருப்பார்கள் அதை எப்படி படிக்க வேண்டும்  கடைசியாக இருபத்தி ஒன்பதாவது நாளில் நீங்கள் ஆங்கிலத்தை ஈஸியாக கற்றுக் கொள்வீர்கள்.
இந்த செயலியை நீங்கள் சரியாக பயன்படுத்தினீர்கள் என்றால் மட்டும்தான்  இதனுடைய பயன் உங்களுக்கு கிடைக்கும்.

App 4   ( Open Talk )

இந்தப் பயன்பாட்டின் பெயர் Open talk இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் ஆங்கிலத்தை சுலபமாக கற்றுக் கொள்ளமுடியும். யாருடைய உதவியும் இன்றி  உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தை யாரிடமாவது பேசினால் தான்  உங்களுடைய ஆங்கிலம் பேசும் திறன் இன்னும் வளரும்.

ஆனால் நீங்கள் வீட்டில் பேசமாட்டீர்கள் நண்பர்களும் பேச மாட்டீர்கள் யார் என்று தெரியாத ஒரு நண்பரிடம் பேச வேண்டுமென்றால் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் பேசிக் கொள்ள முடியும் அதுவும் ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவார்கள்.
தினமும் ஒருமுறை இப்படி செய்தீர்கள் என்றால் உங்களுடைய ஆங்கிலத் திறன் இன்னும் மென்மேலும் வளரும்  இதை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரியப்படுத்துங்கள் நான் உங்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post