Top 2 Best Photo and Video Hide Apps in Android Phone | how to hide my photo and video in gallery | Tamil Server Tech

 2 Best Photo and Video Hide Apps

இந்தப் பதிவில் இரண்டு App யை உங்களுக்கு அறிமுகம் படுத்தப் போகிறேன் இதை நீங்கள் பயன்படுத்தி உங்கள் கைபேசியில் இருக்கும் photo video வை நீங்கள் மறைத்து வைக்க முடியும்.  உங்கள் கைபேசியில் இந்த செயலி இருக்கும் போது உங்கள் நண்பர்கள் பார்த்தால் அதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

ஆனால் அந்த செயலியை வைத்து உங்களுடைய புகைப்படம் வீடியோவை மிகவும் சுலபமாக மறைத்துக் கொள்ள முடியும். அந்த இரண்டு App யை பற்றி விரிவாக பார்க்கலாம்.

App 1 ( Flashlight Locker )

இந்த App ன் பெயர் Flash Light Locker இதை நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பொது விளக்கு எரிய வைக்க முடியும்.  மேலும் உங்களுடைய போட்டோ வீடியோவை இதில் நீங்கள் மறைத்துக் கொள்ள முடியும்.  உங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் யாரும் அதை பார்க்க முடியாது.

இந்த ஆப்பை பார்த்தாலும் இது போட்டோ வீடியோவை மறைத்து வைக்கும் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.  இந்த செயலியை ஓபன் செய்தவுடன் பாஸ்வேர்டு நீங்கள் போட வேண்டும் ஒருவேளை பாஸ்வேர்ட் மறந்து விட்டால் அதற்கு ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு நீங்கள் பதில் சரியாக கொடுக்க வேண்டும் அந்த பதிலை கொடுத்தால் உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றியமைக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் இதில் உங்களிடமிருக்கும் notes Audio இவற்றையும் நீங்கள் இதில் மறைத்து வைக்க முடியும்.

உங்கள் கைப்பேசியில் ரகசியமான போட்டோ வீடியோ அதிகமாக இருக்கிறது என்றால் இந்த செயலி உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் பயன்படுத்திப்பாருங்கள்.

App 2 ( Calculator Locker )

இந்த App ன் பெயர் Calculator Locker இந்த பயன்பாட்டை பயன்படுத்தி நீங்கள் மிகவும் சுலபமாக கணக்குப் போட முடியும். மேலும் உங்களுடைய புகைப்படம் வீடியோ அனைத்தையும் மறைத்து வைக்க முடியும். உங்கள் உறவினர்கள் உங்கள் நண்பர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த செயலியை பார்த்தால் இது போட்டோ வீடியோவை மறைத்து வைக்கும் என்று அவர்களால் நம்பவே முடியாது.

அவர்கள் இதை ஓபன் செய்தாலும் கணக்கு போட தான் முடியும். ஆனால் உங்களுக்கு தான் தெரியும் இந்த செயலியை பயன்படுத்தி  வீடியோக்களை மறைத்து வைக்க முடியும் என்று முதலில் இந்த செயலியை ஓபன் செய்தவுடன் கடவுச்சொல்லை நீங்கள் போட வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை கொடுக்க விரும்பினால் நீங்கள் கொடுக்கலாம் அது உங்களுக்கு பிற்காலத்தில் தேவைப்படும்.

பின்னர் நீங்கள் மறைக்க நினைக்கும் Photo Video Documents Notes எதுவாக இருந்தாலும் அதை இதில் நீங்கள் மறைத்து வைக்க முடியும். நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் வீடியோ உங்களுடைய gallery யை விட்டு மறைந்து விடும்  அதன் பின்னர் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இந்த செயலியை ஓபன் செய்து Unhide கொடுத்தீர்கள் என்றால் மீண்டும் அந்த புகைப்படம் வீடியோ உங்களுடைய gallery வந்துவிடும்.
இந்த செயலியை யாராலும் கண்டுபிடிக்க முடியாது இந்த பயன்பாடு உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும் பயன்படுத்திப்பாருங்கள்.

மேலும்

இந்தப் பதிவில் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள் நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post